சீனாவில் கடும்  பனிமூட்டம் காரணமாக விபத்து. ; 17 பேர் பலி

சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்தனர்.

ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஞ்சாங் பகுதியில் மூடுபனி நிலவுவதால், வாகன சாரதிகள் வேகத்தை குறைத்து, கவனமாக வாகனத்தை செலுத்தவும் எனவும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாமென்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஷெங்ஷூ நகரில் பனிமூட்டத்தால் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.