சீனாவில் புழு மழை.

சீனாவில் நேற்றைய தினம் புழு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த காணொளி பொய்யானது என அந்நாட்டின் பிரபல பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் குறிப்பிட்டுள்ளார்.