சீனாவில் வெள்ள எச்சரிக்கை.

சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை நீர்மட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இரண்டு மாகாணங்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் உள்ள வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்வதையும் ஆறுகளின் குறுக்கே கயிறுகள் மூலம் மக்கள் மீட்கப்படும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

1961ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் அதிக மழை பெய்து வருவதாக வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.