சீன எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய பறக்கும் காரின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி.
இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார், துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான Xpeng Inc உருவாக்கிய இந்த மின்சார வாகனத்திற்கு, எக்ஸ்-டூ என பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் கார், செங்குத்தாக மேல் எழும்பி, தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
90 நிமிடம் நடைபெற்ற சோதனை ஓட்டத்தை, ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
சர்வதேச சந்தையில் இந்த கார், படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.