சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவி  பலி.

சென்னை குரோம்பேட்டையில் பள்ளி சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

லட்சுமி பிரியா என்ற  11ம் வகுப்பு மாணவி தோழியுடன் மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதால்  கீழே விழுந்த பிரியா பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு  அங்கிருந்து தப்பிச் சென்ற பேருந்து சாரதி அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பேருந்து சாரதியின் கவனக்குறைவு, சாலையோர ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.