சுவர்ணவாஹினி தொலைக்காட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சுவர்ணவாஹினி (swarnavahini) தொலைக்காட்சி ஊழியர்கள் அந்த நிறுவனம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதியத்தினை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.

மேலும் நிறுவன ஊழியர்களுக்கு அநாவசியமான செல்வாக்கு செலுத்துவதையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சுதேவ ஹெட்டியாராச்சியிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.