சூடானில் பழங்குடியினர் இடையே மோதல். : 31 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

அல் – டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வன்முறை சம்பவம் இடம்பெற்றது.

இதில், 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 39 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.