சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல். :  65 பேர் படுகொலை.

வட ஆப்பிரிக்கா நாடான சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர்.

ப்ளூ நைல் மாகாணத்தில் ஹவுசா மற்றும் பிரிடா பிரிவு பழங்குடியின மக்களிடையே சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.

இரவு ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதும் இரு பிரிவு மக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.

துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்தனர்.

160க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.