சூர்யா மீதான வழக்கில் திடீர் திருப்பம். 

நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி அவரது 2D நிறுவனம் மூலமாக படங்களும் தயாரித்து வருகிறார்.

இப்படி  நடிகர் சூர்யா தயாரித்து நடித்த “ஜெய்பீம்” படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால்   “ஜெய்பீம்”  படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என வழக்கு தொடரப்பட்டது.

சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதிகள் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றனர்.

சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது. என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.