பாரின் வடக்கு முல்லை மண் வள்ளிபுனமே
வன்னி மகள் செங்காந்தள் செஞ்சோலையே
அழகிய எம் தேசமே!!!
மன்னவன் சிந்தையில் பதிந்த பவளங்களே
வெண்னிதய தேவலோக தேவதைகளே
உங்கள் கதை எம் வரலாரே!!!
ஆதவன் கண் விழிக்க பள்ளிச்சீருடை மேனியழகுற
புத்தகங்கள் கைகளில் புன்முறுவல் இதயமாய்!!!
சிட்டிளம் பட்டாம் பூச்சியாய் சிறகு விரித்த பொழுதுகள்
ஈழ விடியல் கல்வியெனும் ஆயுதமேந்தி
சிறார்கள் இதயங்களில் மிதந்தன எதிர்காலக் கனவுகள்…!!!
இரண்டாயிரத்தாறை எட்டுப் பதினாலாய் கூறு போட்டது நியாயமா?
ஈனர்ப்படையே விடியற் காலையேழு மணி உந்தன் உல்லாச நேரமோ?
வான் படையரசே நீ மானமிழந்த கோழை!!!
தூங்கிய பொழுதுகள் துயில் கலைய
ஊர்ந்தது வானூர்தி பொழிந்தது குண்டு மழை துவள்கள்
அறுபத்தொன்றும் சதை பிண்டமாக சிதற
நூற்றயிம்பத்தைந்து படுகாய செங்குருதி
விடிந்த ஈழ மண் இருண்ட நாளது!!!
படிந்தே கிடக்கிறது சிதைந்த வித்துடல்கள்
காற்றலையில் மிதக்கிறது சிட்டிள எண்ணலைகள்
பார்க்கும் திசையெல்லாம் வெண்ணிற ஆடை
இரத்தக்கறைகள் மண்ணில் சிந்திய செந்தாமரை முகங்கள்…!!!
வாஞ்சையற்ற வண்ண மலர்களை வேட்டையாட
பதினாறு தொடர் பதினெட்டு கட்டிளமைப்பருவம் மீது திட்டமிட்ட சதி அரசுக்கு!
எம்மினத்தை அழிக்க மிலேட்சத்தனம் பதினாறு குண்டு மழை பொழிந்து
குழந்தைகளை கொன்று குவித்தது உனக்கு சாதனையா?
வெட்கம் கெட்ட கூலிப்படை நீ
இது உந்தன் வீரச் செயலா அட சைக்!
இனம் பெருக்கும் எம்மினமே பெண்ணினமே அதுவே இனவாதக்குறி அரசுக்கு
ஈழ தேச வீரனை அழிப்பதாய் தவறியது இலக்கு உனக்கு!!!
பிஞ்சுகளை அழித்து விட்டு
உலகிற்கு பொய்யுரைத்து பறை சாற்றினாயா?
இடியாகிப்போகாதோ லங்கா தேசம்…!!!
மன்னிக்க தோனுமோ இல்லை மறக்கத்தான் தோனுமோ
மாண்டது எம் தேச எதிர்கால விருட்சங்கள்
உலகே நீ வேடிக்கைதான் பார்த்தாய்!
நீ எம்மினத்தை அழித்தாலும் ஈழம் வாடி வதங்கவில்லை
விடியலைத்தேடி நகர்கிறது எம் தேசம்…!!!
ஏனென்றால் புழுவாய்த்துடித்ததும்
எம் செல்லக்குழந்தைகள் செஞ்சோலை சிறார்கள்…!!!
முல்லைக்கடல் நந்திக்கடலாய் நீலமற்று
செந்நிறமான நிமிடங்கள் அலைகளுடன் தவழ்ந்தே
பால் மனம் மாற மழழைகளுடன் பேசுகின்றாள்
காத்திருங்கள் உங்கள் ஏக்கங்கள் விடையாகும் நாள் விரைவிலென…!!!
உங்கள் ஆத்மாக்கள் ஈழ மண் சங்கமம்
தென்றலுடன் கலந்த காவியங்கள் நீங்கள்
கனவுகளுடன் ஆத்மா சாந்தி பெறட்டும்…!!!
எழுத்து – செஞ்சோலைப்பிரிகை