சைக்கிளிலிருந்து கீழே விழுந்த  அமெரிக்க அதிபர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவேர் மாகாணத்தில் உள்ள உள்ள தனது கடற்கரை வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார்.

எனினும் உடனடியாக நான் நலமாக இருக்கிறேன் என்று அவர் எழுந்து கொண்டார்.

இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபருக்கு காயம் எதுவும் இல்லை எந்த மருத்துவ உதவியும் தேவைப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார். சில நாட்கள் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.