ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்றைய தினம், காலை 10.10 அளவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலையில், ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.