ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகல்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

பாரிய மக்கள் போராட்டத்தை அடுத்த, தான் இம்மாதம் 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 9 ஆம் திகதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சவூதி அரேபியாவின் சவூதியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை சிங்கப்பூரை சென்றடைந்த  கோட்டாபய  அந்நாட்டை சென்றடைந்த சில மணித்தியாலங்களில் சபாநாயகருக்கு தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.