ஜனாதிபதி தேர்தலின் போது புகைப்படம் எடுத்தால் 6 மாத சிறை தண்டனை.

ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக தேர்தலின் போது தமது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தால் 7 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சகல விதிகளையும் கடைப்பிடித்து ஜனநாயகத்தை மதித்து ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.