ஜனாதிபதி முன்னர் அறிவித்தது போன்று குறித்த திகதியில் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மேற்கொண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி வெளியேறியிருந்தார்.
இதனையடுத்து 13 ஆம் திகதி புதன்கிழமை தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தான் முன்னர் அறிவித்தபடி பதவிவிலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.