ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்  ஒரு பாகிஸ்தானியர் உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் நடைபெற்ற  துப்பாக்கி சூட்டில்  3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் இருவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஒரு AK-74 ரக துப்பாக்கி, ஒரு AK-56 ரக துப்பாக்கி மற்றும் 1 கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு  துப்பாக்கி சூட்டில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.