ஜஸ்ப்ரிட் பும்ரா ஓய்வு

இந்தியாவின் ராஞ்சியில் இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் நான்காவது டெஸ்டின் முடிவைப் பொறுத்து, அவர் தர்மசாலாவில் இடம்பெறும் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் கடந்த 19 ஆம் திகதி ராஜ்கோட்டில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் அகமதாபாத்துக்கு புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பணிச்சுமை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த மூன்று போட்டிகளில் 17 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

எனினும், ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை அணி நிர்வாகம் களமிறக்குமா? என்பது தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.