ஜெயிலர் சிவராஜ்குமாரை அவமானப்படுத்தினாரா தனுஷ்? ஷாக்கான ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமாரை தான் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

இப்படத்தை தொடர்ந்து சிவராஜ் குமார் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கின் போது சிவராஜ்குமார் செட்க்கு வந்து பல மணி நேரம் கழிச்சு தனுஷ் வந்தாராம்.

அதுமட்டுமின்றி தனுஷ் 15 நிமிடம் நடித்து விட்டு மூடு சரி இல்லை என்று சொல்லி பாதிலேயே படப்பிடிப்பு தலத்தில் இருந்து சென்றுவிட்டாராம். இதை பார்த்த சிவராஜ்குமார் ஷாக் ஆகிவிட்டாராம்.

கடைசியில் எதாவது செய்து ஷூட்டிங் முடித்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் தனுஷ் அவரது குணத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.