டிக்கோயா தொடர் குடியிருப்பில் தீ விபத்து.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா தரவளை கீழ் பிரிவில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு வீடுகள் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த நான்கு வீடுகளின் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளன.

வீட்டில் இருந்தவர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.