டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.