தங்கராஜூ சுப்பையா என்ற  சிங்கப்பூர்  தமிழர் தூக்கிலிடப்பட்டுள்ளார்

போதைப்பொருள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழருக்குசிங்கப்பூர் மரண தண்டiனைய நிறைவேற்றியுள்ளது.
இன்று அதிகாலை அவர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கராஜாமீது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது சட்டசெயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் அதிகாரிகள் இவர் கஞ்சாவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

சிங்கப்பூரில் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு  தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளைவிடுத்திருந்தனர்

இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்திருந்தனர்

 எனது சகோதரர் குறித்த வழக்கு நியாயமான விதத்தில் இடம்பெற்றதாக நாங்கள் கருதவில்லை எங்கள் ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் மனுவை வாசிப்பார் என கருதுகின்றேன் என  சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்திருந்தார்.

 இளவயதிலிருந்து எனது சகோதரர்இரக்ககுணமிக்கவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் அவர் எவருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை அவர் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தார் என சகோதரி கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.  

ஆறுமாதகாலப்பகுதியில் சிங்கப்பூர் முதல்தடவையாக மரணதண்டனையைநிறைவேற்றியுள்ளது . 2017 இல் கஞ்சா வைத்திருந்தார் என அதிகாரிகள் சுப்பையாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். தாய்லாந்து உட்பட பல நாடுகளில் கஞ்சா  வைத்திருப்பது குற்றமற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மரண்தண்டனையை கைவிடவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துவருகின்றன.

இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகளும் பிழைகளும் உள்ளதாக குடும்ப உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.