குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 18 பேர் வேன் மூலமாக குற்றாலத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பின்புறம் வந்தபோது தண்ணீர் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளனாது.
இதில், வேன் ஓட்டுநர் பிரபு மற்றும் வேனில் பயணித்த சௌந்தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை மீட்புத் துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி ஒத்தக்கடை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.