தனியார் பேருந்தில் தீ!

இந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா நோக்கி சென்ற தனியார் பேருந்து உலவப்பாடு அருகே திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனை கவனித்த சாரதி பேருந்தை நிறுத்தியவுடன் அதில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு வேகமாக வெளியேறியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து சேர்வதற்கு முன்னதாக பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடு போன்று மாறியது.