தனியார் விமானம் விபத்து. : 6 பேர் பலி.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

லியர்ஜெட் 55C என்ற தனியார் விமானம் வெனிசுலா தலைநகரம் நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு துண்டிப்பதற்கு 29 நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 பயணிகள் உட்பட 6 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.