தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி நிர்வாகிகள் கைது.

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக  மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தி, பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்தனர்.

அவருடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக   மகளிர் அணி நிர்வாகிகளையும் பொலிஸார் கைது செய்தனர்.