தலவாக்கலை வனப்பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு 

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தலவாக்கலை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர், கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.