தலைமுடி வெட்டும் போது HIV வைரஸ் தொற்றக் கூடும்.  

சிகையலங்கார நிலையங்களில் தலைமுடி வெட்டும் போது கூட எச்.ஐ.வி. வைரஸ் தொற்றக்கூடும் என தோல் நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர் ஜனக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் மருத்துவர் இதனை கூறியுள்ளார்.

சிகையலங்கார நிலையங்களில் தலைமுடியை வெட்டும் போது, சவரக்கத்தியை மாற்ற வேண்டும்.

தோல் சிராய்வுகள் மூலம் விஷ கிருமிகள் செல்லும்.

இது ஒரு நபரிடம் இருந்து மற்றுமொரு நபருக்கு எச்.ஐ.வி.வைரஸ் தொற்றும் ஒரு வழியாக இருக்கின்றது.

இதனால், ஒரே உபகரணத்தை பயன்படுத்தி ரோமங்களை சவரம் செய்யக்கூடாது.

அத்துடன் பச்சை குத்தும் போது, ஊசிகளை மாற்ற வேண்டும். எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடீஸ் போன்ற நோய்கள் இவற்றின் ஊடாக தொற்றுக்கூடியவை.

இதனால், தரமான இடங்களில் அவற்றை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ஜனக அகரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.