துனீசியாவில் படகு மூழ்கியதில் 5 பேர் பலி. ;  10 பேர் மாயம்.

வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் மார்க்கமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது, ஸ்ஃபாக்ஸ் பிராந்தியம் அருகே பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 பேரை பத்திரமாக மீட்டனர்.

மேலும், மாயமான 10 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.