தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது மாணவி

சிலாபத்தில் வீடொன்றில் வசித்து வந்த 9 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயிற்றில் தொங்கிய நிலையில் நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சலானி பீரிஸ் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கருதி சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.