தென்கொரியாவில் வாகனங்கள் மோதியதில் தீ விபத்து – 5 பேர் பலி.

தென் கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இரண்டாவது கியோங்கின் விரைவுச் சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்துள்ளது.

பேருந்தும், டிரக்கும் ஒன்றுக்கொன்று மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.