தென்னிலங்கையில் அதிர்ச்சி : ஒரே குடும்பத்தில் ஐவர்  தற்கொலை

தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, அனுராதபுரம் – எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 24 வயதான துசித சம்பத் பண்டார என்ற இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

காலி பிரதேசத்தில் பணிபுரியும் இடத்திலிருந்து எப்பாவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் நேற்றைய தினம் (02-08-2023) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் உயிரை மாய்த்து உள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி குடும்பத்தில் 5 அவது நபராக இந்த இளைஞன் நேற்றைய தினம் உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகோதரன் மற்றும் சகோதரி ஒருவர் தலாவ பிரதேசத்தில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் மற்றுமொரு சகோதரன் தோட்டத்திலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, நேற்று இளைஞன் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட அதே அறையில் அவரது மற்றொரு சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.