தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூறாவளி வடக்கிலும் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள். ; மணிவண்ணன் எச்சரிக்கை.

தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியாக வருபவரிடம் தமிழ் மக்காளுக்கான குறுகிய கால செயற்றிட்டம் என்ற அடிப்படையில் வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதனை செய்ய தவறி வெறுமனே வார்த்தைகளால் அள்ளி வீசினால் அந்த அரசியல் கட்சிகளை தென்னிலங்கையில் ஏற்பட்ட சூறாவளியினை வடக்கிலும் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள் என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ,ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய சூழ்நிலையினை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்காக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்பதை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் பொது அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசிக்க வேண்டும் .இது வரலாற்று கட்டாயமாகும் .

அரசியல் தீர்வு தொடர்பாகவும் காத்திரமான உத்திரவாதத்தினை வழங்க வேண்டுமென்று வேட்பாளர்களிடம் பேரம் பேசலிலே ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.,இதனை தமிழ் கட்சிகள் செய்ய தவறி வெறுமனே வார்த்தைகளால் அள்ளி வீசினால் அந்த அரசியல் கட்சிகளை தென்னிலங்கையில் ஏற்பட்ட சூறாவளியினை வடக்கிலும் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

எதிர் வருகின்ற காலங்கள் தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மறக்க முடியாத காலமாக மாறி விடும்.ஆகவே தமிழ் மக்கள் தங்களுடைய தலைவர்களின் செயற்பாட்டினை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த சந்தர்ப்பத்தினை கைவிடுவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை கொடுப்பார்கள்.

ஜனாதிபதியாக வருபவரிடம் தமிழ் மக்காளுக்கான குறுகிய கால செயற்திட்டம் என்ற அடிப்படையில் வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

  1. அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்த வேண்டும்.
  2. ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகளை விடுவிக்கப்பட வேண்டும் .
  3. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.
  4. வடக்க்கை,கிழக்கை மையப்படுத்தி பொருளாதார அதிகார கடடமைப்பினை உடனாக நிறுவுவ வேண்டும் .

போன்ற கோரிக்கைகளினை முன்வைத்து வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.