தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு(15) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலஸார் குறிப்பிட்டனர்.
உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.