தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் கவிதைகள்

ஒற்றைக்கொடியோன்
கற்றையாய்ப் படைகட்டினான்

வரிப்புலி,
கரும்புலி.
கடற்புலியென
எட்டுத்திசை அனுப்பி
எம்மினம் காத்த குமரன்

ஒற்றை சொல்லில் ஔியூட்டும் பெருமான்
பற்று வைத்தான் தன்னின விடிவுக்கு!

சோழர்வழிச் சொல்லாடன்
எங்கள் கரிகாலன்

புலிக்கொடி உருத்தாழன். தன்நலமற்ற பெருவீரன்
மறத்தமிழர் புகழ்சூடிய மானசீகப்பேரரசன்!

பிரபஞ்சம் பதறும் பிரபாகரா.என்றாலே

ஆற்றலுடன் அறம்வழிநடந்து ஆக்கிரமிபை அழித்த
அசுரனே! எம்மினத்தின் ஆணிவேரே!

உன்னால் மார்புதட்டி
ஈழத்தமிழர் நாமென்று விரிந்துகிடக்கிறோம் இவ்வையகத்தில்!

ஆழியாய் வரும் பகையை அச்சம் தவிர்த்து எதிர்கொள்வோம்!

– S.மோகன்

(தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் கவிதைகள்)