தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம்

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்து விட்டதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கையை திருத்தி அமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்த யோசனைக்கு நேற்று (21) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.