தேயிலை, நெல், சோளம் செய்கையாளர்களுக்கு யூரியா வழங்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து கிடைக்கப் பெறும் 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை முதற்கட்டமாக தேயிலை, நெல் மற்றும் சோளம் ஆகிய 3 பயிர்ச் செய்கையாளர்களுக்காக பகிர்ந்தளிக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேயிலை பயிர் செய்கைக்காக 20,000 மெட்ரிக் டன் யூரியா பசளை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

நெற் பயிர் செய்கைக்காக 40,000 மெட்ரிக் டன் பசளையும், சோளச் செய்கைக்காக 5,000 மெட்ரிக் டன் பசளையும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தள்ளார்.