தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141 க்கும் மேற்பட்டோர் பலி.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள  தொங்கு பாலத்தின் மீது நேற்று மாலை சென்றுள்ளனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர்.

பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

இதையடுத்து, இது குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் பொலிஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 141 ஆக பதிவாகி உள்ளதாகவும் 177 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என கூறப்படுகிறது.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.