கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தற்போது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி திரைப்படங்களை தயாரிக்கப்போகிறாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழில் அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் தோனி, தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக மாறியிருக்கிறார்.
தமிழ் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர். தற்போது அவர் தமிழ் படங்களை தயாரிக்கவிருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு அவர் மேலும் நெருக்கமாவார்.
முதல் ஐபிஎல் போட்டியின் போது நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக இருந்தார்.
அப்போது தனது மகன் சஞ்சயுடன் விஜய், தோனியை சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அடிக்கடி பகிர்வதுண்டு.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பீஸ்ட் படப்பிடிப்பும் தோனியின் விளம்பர படப்பிடிப்பும் ஒரே வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது நடிகர் விஜய்யும், தோனியும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டனர்.
இதனால் எதிர்காலத்தில் தோனி தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.