நடமாடும் எரிபொருள் நிரப்பு சேவை ஆரம்பம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடமாடும் எரிபொருள் நிரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.

பரீட்சார்த்த திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் எரிபொருள் நிரப்பு சேவையின் ஊடாக, முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் வண்டிகள் மற்றும் கலன்களுக்கு எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்ப நிலையங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள திறந்தவெளி இடங்களில் இந்த நடமாடும் எரிபொருள் விநியோக திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.