நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்.

பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் தனது 69 ஆவது வயதில் காலமானார்.

பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரதாப் போத்தன்.

வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.

இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன் தினம் காலமானார்.

இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.