நடிகர் மனோபாலா காலமானார் 

இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69.

கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.

1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது.

பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.

குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.