நடிகர் ஹரி வைரவன் காலமானார்.

‘வெண்ணிலா கபடி குழு’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவன், உடல் நலக்குறைவின் காரணமாக இன்று மதுரையில் உயிரிழந்தார்.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘குள்ளநரி கூட்டம்’ ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன்.

மதுரையை சேர்ந்த இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து, வறுமையில் வாடிக் கொண்டிருந்த இவருக்கு உடல் நலக்குறைவும் இணைந்து கொண்டது.

இவருக்கு திரைத்துறையினரும், நடிகர் சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.