நடிகை மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 215 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதில், சுகேஷ் சந்திரசேகர் ஏமாற்றிப் பணம் பறிப்பதை ஜாக்குலின் அறிந்திருந்ததாகவும், ஏமாற்றிய பணத்தில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜாக்குலின் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கிய நிலையில் அவர் இந்தியில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

அக்சய் குமாருடன் நடிக்கும் ராம்சேது படம் அக்டோபர் இறுதியிலும், ரண்வீர்சிங்குடன் நடிக்கும் சர்க்கஸ் படம் டிசம்பர் இறுதியிலும் திரைக்கு வர உள்ளன.

கிச்சா சுதீப்புடன் ஜாக்குலின் நடித்த விக்ரந்த் ரோணா திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஜூலை 28 அன்று வெளியானது.