நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் சென்ற கார் விபத்து

கனடாவில் நேரிட்ட விபத்தில் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் காயமடைந்தனர்.

உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா,  பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, 90களில் ‘கனவு கன்னி’யாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  தொழிலதிபர் இந்திரகுமார் பத்மனாதினை திருமணம் செய்து, கனடாவில் வசித்து வருகிறார்.

அவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ஒன்டாரியோவில் குழந்தைகளை பாடசாலையிலிருந்து அழைத்து கொண்டு காரில் ரம்பா சென்றுள்ளார்.

அப்போது  ரம்பா  கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியுள்ளது.

இதில் ரம்பா, அவரது குழந்தைகள், உடன் வந்த பெண் லேசான காயமடைந்தனர்.

மகள் சாசா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.