நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்து. ;  14 பேர் பலி.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அந்நாட்டின் மராஜோ தீவில் இருந்து 40 பேரை ஏற்றிக் கொண்டு பிலிம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த படகு, கொடிஜுபா (Cotijuba) தீவு அருகே கடலில் கவிந்ததது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடல் நீரில் மூழ்கி மாயமான 26 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.