நண்பர்களுடன் விருந்திற்கு சென்ற பாடசாலை மாணவி பலி

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.