நமீபியாவை எதிர்த்தாடிய இலங்கை அணி படுதோல்வி

2022 ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், இன்றைய முதலாவது போட்டியில் நமீபியாவை எதிர்த்தாடிய இலங்கை அணி படுதோல்வியடைந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

 T20worldcup22, NAMvsSL

அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 T20worldcup22, NAMvsSL

இந்நிலையில், 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிய இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

 T20worldcup22, NAMvsSL

அதற்கமைய,  இலங்கை அணி  19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 T20worldcup22, NAMvsSL

இதன்படி, 2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் நமீபிய அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  

 T20worldcup22, NAMvsSL