நாட்டில் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் பெலியத்த பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.