நாட்டில் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவிப்பு

நாட்டில் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் நிரப்பப்படாமையே எரிபொருள் பற்றாக்குறைக்குக் காரணம் என இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.