நாய் குறுக்கிட்டதால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் அம்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியில் வீதியைக் கடக்க முயன்ற நாய் ஒன்று, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது உந்துருளியில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் தம்பகல்ல பிரதேசத்தில் வசித்து வந்த, 41 வயதுடைய இராணுவ சார்ஜன்ட் ஒருவராவார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பின்னர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இச்சம்பவம் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.